நெல்லை,
நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையன்று பத்ர தீப திருவிழா விமரிசையாக நடைபெறும். அதற்கு முன்னதாக, முக்கிய நிகழ்வாக தை அமாவாசையை முன்னிட்டு ஆண்டுக்கு ஒருமுறை தங்க விளக்கு ஏற்றப்படும்.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணியளவில் சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் தங்க விளக்கும், அதன் அருகில் உள்ள 2 வெள்ளி விளக்குகளையும் ஏற்றினார்கள். தொடர்ந்து விளக்குக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து, தை அமாவாசையையொட்டி நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட உள்ளது.