சென்னை,
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் தனித்துவம் மிக்கவரும், வங்கத்துச் சிங்கம் என்றும் நம் மக்களால் இன்றும் அன்புடன் அழைத்துப் போற்றப்படும் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, காலை சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.