சென்னை,
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
'ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாட்டின் துடிப்பான இளைஞர்களை ஒன்றுத்திரட்டியதுடன், இந்திய ராணுவத்தை உருவாக்கி எதிரிகளை திணறடித்து வீரத்தின் அடையாளமாய் விளங்கிய மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளில் அவரின் வீரத்தை போற்றி வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
'தேசிய இராணுவத்தை உருவாக்கி பிரிட்ஷ் அரசிற்கு எதிராக போராடிய விடுதலை வீரர் "வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளாகிய தேசிய வல்லமை தினத்தில்" அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து வணங்குவோம்! அவரது தியாகம், துணிச்சல் அனைவர் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும்!' என்று கூறியுள்ளார்.