தமிழக செய்திகள்

நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடந்தது.

தினத்தந்தி

புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தால்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதையடுத்து நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நெல்லையில் இருந்து ஒரு கால்நடை மருத்துவக்குழுவினர் புகழூர் நகராட்சிக்கு வந்து அங்கு சுற்றித்திரிந்த 30-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். இந்த பணிகளை புகழூர் நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி ஆணையாளர் கனிராஜ், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் பணியாளர்கள் பார்வையிட்டனர். தினமும் 30 நாய்கள் வீதம் பிடிப்பதாகவும், சுமார் 500 நாய்களைப் பிடித்து அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், மேலும் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து தருவதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்