கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கோவை மாவட்டத்துக்கு புதிய பா.ஜ.க. தலைவர் நியமனம் - அண்ணாமலை அறிவிப்பு

பா.ஜ.க. மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு, பாலாஜி உத்தம ராமசாமி கடிதம் கொடுத்திருந்தார்.

தினத்தந்தி

சென்னை,

கேவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து பாலாஜி உத்தம ராமசாமியை விடுவித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பா.ஜ.க. கட்சியின் கோயம்புத்தூர் நகர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த பாலாஜி உத்தம ராமசாமி, தனது மாவட்டத்தை சிறப்பான முறையில் வழிநடத்தி களப்பணியாற்றி வந்தார். தற்போது சொந்த காரணங்களுக்காக பா.ஜ.க. மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார்.

அவரது கடிதத்தை ஏற்றுக்கொண்டு அவர் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார்.

கோயம்புத்தூர் நகர் மாவட்ட பொதுச்செயலாளராக பணியாற்றி வந்த ஜே.ரமேஷ்குமார், புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்" என்று அதில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது