சென்னை,
உயர்கல்வி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ரூ.202.7 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை காணொலி வாயிலாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில் வகுப்பறை, ஆய்வகங்கள், கருத்தரங்கு கூடம், விடுதிகள், மின்னணு நூலகங்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
மேலும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 150 அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டது. அடையாளமாக 5 சித்தா உதவி மருத்துவர்கள், 5 ஆயுர்வேத உதவி மருத்துவ உள்ளிட்ட 15 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல் அமைச்சர் வழங்கினார்.