தமிழக செய்திகள்

புதிய வகுப்பறை கட்டும் பணி

பழைய கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணியை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

குத்தாலம்;

பழைய கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 2 பள்ளி வகுப்பறை கட்டிடத்தை குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் கு.மகேந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒப்பந்தக்காரர்களிடம் கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க கேட்டுக் கொண்டார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், சமையல் கூடம், கழிவறை, குடிநீர் தேக்க தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பழைய கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 125 மாணவ- மாணவிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு சாப்பிடுவதற்கு புதிய தட்டுகள், குடிநீர் குவளை, நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். அப்போது பழைய கூடலூர் ஊராட்சி தலைவர் பாண்டியன், பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்