தமிழக செய்திகள்

பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் வெளியான புதிய ஆதாரம்..! - சிசிடிவி காட்சியால் பரபரப்பு

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர்.

இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி தரப்பு பேசியதாக ஆதாரம் வெளியாகியுள்ளது.

அந்த சிசிடிவி வீடியோவில், ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்துள்ளனர். ஸ்ரீமதி ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடந்த காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என செல்வி குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் தற்போது ஆதாரம் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சக்தி மெட்ரிக் பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த வீடியோவில், எதிர்தரப்பில் கள்ளக்குறிச்சி மகாபாரதி பள்ளி நிர்வாகி மோகன் மற்றும் சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் உறவினர்கள் என 4 பேர் பங்கேற்றுள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை