தமிழக செய்திகள்

மேடவாக்கத்தில் புதிய மேம்பாலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மேடவாக்கம் பகுதியில் தாம்பரம் - வேளச்சேரி மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தினத்தந்தி

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் பகுதியில் தாம்பரம் - வேளச்சேரி இடையே நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ரூ. 95.21 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாம்பரம் - வேளச்சேரி இடையே மேடவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் மேம்பாலத்தில் காரில் பயணம் செய்தார்.

2.03 கி.மீ நீளமும் 11 மீ அகலமும் கொண்ட மேடவாக்கம் மேம்பாலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தற்போதைய பாலங்களில் மிக நீளமான மேம்பாலம் என கூறப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து