தமிழக செய்திகள்

வளாச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் வளாச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வளாச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில், " வளாச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, அரியலூர், கோவை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள் உள்ளிட்டவற்றை கண்காணிப்பு பணியை மேற்கெள்ள உள்ளனர். சென்னை தவிர ஏற்கனவே 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் மீதமுள்ள 12 மாவட்டங்களுக்கான வளர்ச்சி துறை திட்ட பணிகளுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்