தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் புதிய புறக்காவல் நிலையம்: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவன்நாயர் காலனி கடற்கரை பகுதியில் காவல்துறை சார்பாக புதிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவன்நாயர் காலனி கடற்கரை பகுதியில் காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை இன்று மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது மாவட்ட எஸ்.பி. பேசுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து தங்களது குறைகளை இங்கு நிவர்த்தி செய்து கொள்ளாலம் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து