சென்னை,
மயிலாடுதுறை - வேளாங்கண்ணி இடையே காரைக்கால், பேராளம் வழியாக புதிய பயணிகள் ரெயில் வரும் மே மாதம் 20-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மயிலாடுதுறையில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் பேராளம், அம்பகரத்தூர், பட்டாக்குடி, திருநள்ளாறு, கரை-கோவிபத்து, காரைக்கால், திருமலைராயன்பட்டிணம், நாகூர், வெள்ளிபாளையம், நாகப்பட்டினம் வழியாக இரவு 7.20 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், மே மாதம் 21-ந் தேதி முதல் வேளாங்கண்ணியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் காலை 8.40 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.