தமிழக செய்திகள்

ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலில் புதிய நடைமுறை: ரெயில்வே வாரியம்

இந்த திட்டம் பகல் நேரத்தில் இயக்கப்படும் ரெயில்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ரெயிலில் பயணம் செய்ய உயர் வகுப்புகளில் காலி இடங்கள் இருந்தால் கீழ் வகுப்பில் காத்திருப்போர் பட்டியலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒதுக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது, சாதாரண பெட்டியில் 2-ம் வகுப்பில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணி ஒருவர் 3-ம் வகுப்பு குளிர்சாதன வகுப்புகளில் காலி இடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணம் இன்றி அவர்களுக்கு குளிர்சாதன பெட்டிகளில் இருக்கை வழங்கப்படும். இந்த நடைமுறை 2006-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் இந்த திட்டத்தில் மத்திய ரெயில்வே வாரியம் சில மாற்றத்தை செய்துள்ளது. அதாவது, சாதாரண பெட்டியில் 2-ம் வகுப்பில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணி ஒருவர் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி மட்டுமல்லாமல், 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காலியிடம் இருந்தாலும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.

அதேபோல, 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2-ம் வகுப்பு அல்லது முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காலியிடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணமின்றி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், இந்த திட்டம் பகல் நேரத்தில் இயக்கப்படும் ரெயில்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது என மத்திய ரெயில்வே வாரியத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு