தமிழக செய்திகள்

உஞ்சனை ஊராட்சியில் புதிய ரேஷன் கடை

உஞ்சனை ஊராட்சியில் புதிய ரேஷன் கடையை மாங்குடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

தினத்தந்தி

தேவகோட்டை

கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் உஞ்சனை ஊராட்சி சின்ன உஞ்சனையில் புதிய ரேஷன் கடையும், உஞ்சனை புதுவயலில் புதிய டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றியும்), அருகில் புதிய குடிநீர் மேல்நிலைத்தொட்டியும், அதன் அருகில் உள்ள குடியிருப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் சாலையையும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உஞ்சனை ஊராட்சி மன்ற தலைவர் அருணகிரிநாதன், வெங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஆறாவயல் மகேந்திரன், மின்வாரிய செயற்பொறியாளர் லதாதேவி, உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ், உதவி மின் பொறியாளர் சேவுகப்பெருமாள் மற்றும் தேவகோட்டை வட்டார காங்கிரஸ் நிர்வாகி மனோகரன், இளங்குடி முத்துக்குமார், சுப்பிரமணியன், புத்தூரணி அன்பு, தேவகோட்டை நகர் காங்கிரஸ் நிர்வாகி சங்கர், தேவகோட்டை தாலுகா கம்யூனிஸ்டு செயலாளர் காமராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு