தமிழக செய்திகள்

புதிய பள்ளிக்கூட கட்டிடம்

புதிய பள்ளிக்கூட கட்டிடம் திறக்கப்பட்டது.

தினத்தந்தி

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே முகவூர் காமராஜர் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சேதமடைந்த கட்டிடம் அகற்றப்பட்டு அதே இடத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக 2 ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கட்டப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கூடுதலாக ரூ.2 லட்சம் செலவில் எல்.இ.டி. டி.வி. யும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பு அறைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையடுத்து பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தனுஷ் குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இதில் தலைமை ஆசிரியர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்