திருச்சி,
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிற ஸ்மார்ட் வகுப்பு விவரங்களை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை வழங்கினார். மாணவ, மாணவிகள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க புது யுக்தியை கையாள இருக்கிறோம் என்றார்.