தமிழக செய்திகள்

பாளையம்பட்டி ரத வீதியில் புதிய தார் சாலை

ரத வீதியில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் வேணுகோபாலசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம். தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்வார்கள். இந்த தேரோடும் வீதி 10 அடி சாலையாக மட்டுமே இருந்ததால் தேர் அடிக்கடி ஆங்காங்கே சாலையிலிருந்து இறங்கி மணிக்கணக்கில் வீதியில் நிற்பது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால் தேரோடும் வீதிகளில் நன்கு அகலமான சாலைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.85 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. பணிகள் நடைபெறும் போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாக முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தற்போது சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த புதிய தார் சாலையில் தேரானது சிரமம் இல்லாமல் செல்லும் வகையில் நன்கு அகலமான சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தேரோடும் வீதிகளில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்