தமிழக செய்திகள்

கிருஷ்ணராயபுரத்தில் புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு வந்தது

கிருஷ்ணராயபுரத்தில் புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தினத்தந்தி

கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய மின் மோட்டார்களும் அவ்வப்போது மின்னழுத்த வேறுபாடு காரணமாக பழுதடைந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சீரான மின்வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பழைய ஜெயங்கொண்டம், எம்.புதுப்பட்டி, தாராபுரத்தனூர், சேங்கல் ஆகிய பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி கலந்து கொண்டு புதிய மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் ரவிராஜா, பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி தலைவர் சவுந்தரப்பிரியா, பழைய ஜெயங்கொண்டம் பேரூர் கழகச் செயலாளர் மோகன்ராஜ், மின்வாரிய அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து