தமிழக செய்திகள்

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் - தமிழக அரசு

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை கணக்கிட புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டது.

சென்னை,

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தபோது அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதில் விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டு பணியாற்றியதாக 'வெயிட்டேஜ்' கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54-க்கு பதிலாக 56 வயது மற்றும் அதற்கு கீழ் வயதில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றால் அவருக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

அதேபோல் 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை