தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி

காய போட்டிருந்த துணிகளை எடுத்த போது மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலியானார்.

கோத்தகிரி

கோத்தகிரி அருகே இந்திராநகர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன் பிரபு (வயது 24). இவருக்கும், மகாலட்சுமி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் 2-ந் தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று அர்ஜூன் பிரபு தனது வீட்டின் முன்பு கம்பியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்து உள்ளார். அப்போது அந்த கம்பி மீது மின் ஒயர் பட்டது. இதை தெரியாமல் கம்பியை பிடித்த போது, அர்ஜூன் பிரபுவை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனேவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மகாலட்சுமி கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு