கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 1ஆம் தேதி பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்த சில நாட்களில் உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள், 9 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், 2 பேர் நிரந்தர தொழிலாளர்கள் ஆவர்.
இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து மற்றும் தொழிலாளர்கள் மரணங்கள் தொடர்பான விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.