தமிழக செய்திகள்

பிஎப்ஐ அமைப்பின் மதுரை மண்டல தலைவரை கைது செய்த என்.ஐ.ஏ

தடை செய்யப்பட்டுள்ள பிஎப்ஐ அமைப்பின் மதுரை மண்டல தலைவரை கைது செய்த என்.ஐ.ஏ.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். என்ஐஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் கம்பம் நகரில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் சாதிக் அலி கைது செய்யப்பட்டுள்ளார். சாதிக் அலி வீட்டில் இன்று சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்த சாதிக் அலியை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுபோன்று, திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரில் பிஎப்ஐ முன்னாள் மண்டல தலைவர் முகமது கைசரை கைது செய்துள்ளது என்.ஐ.ஏ. முகமது கைசர் வீட்டில் சோதனை நடத்திய நிலையில், என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றுள்ளது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்துடன் (பிஎப்ஐ) தொடர்ந்து செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை