தமிழக செய்திகள்

திருச்சி, தஞ்சை, நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

திருச்சி, விழுப்புரம், தஞ்சை நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அடுத்து உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திருச்சி, விழுப்புரம், தஞ்சை, நெல்லை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மொத்தம் 9 மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது என கூறப்படுகிறது. இதன்படி, நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் இல்லத்தில் இந்த சோதனை நடைபெறுகிறது.

கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள துறவி கிராமத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்