தமிழக செய்திகள்

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

நெல்லை, கோவை, மதுரை உள்பட 8 மாவட்டங்களில் உள்ள 20 க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தினத்தந்தி

கோவை,

சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.கோவை உக்கடம் பகுதியில் அபிபுல் ரகுமான் என்பவர் வீட்டிலும்  நெல்லை ஏர்வாடியில் பக்ரூதின் அலி என்பவர்  வீட்டிலும் என்.ஐ.ஏ  சோதனை நடைபெற்று வருகிறது.

நிதி வசூல், மூளைசலைவை செய்தல், உபகரணங்கள் கொடுத்து உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் , என்.ஐ.ஏ அதிகாரிகள்  சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு