தமிழக செய்திகள்

தமிழகத்தில் இரவு ஊரடங்கு; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை

தமிழகத்தில் இரவு ஊரடங்கு பற்றி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தது. தினசரி பாதிப்பு 30 ஆயிரம் தொட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் இன்றும் 30 ஆயிரத்திற்கு குறையாமல் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. கடந்த 1ந்தேதி 1,500க்கும் குறைவாக பாதிப்பு இருந்த சூழலில் இந்த நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இரவு ஊரடங்கு பற்றி முதல்-அமைச்சர் (வரும் 27ந்தேதி) மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 31ந்தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ளன. இதனை முன்னிட்டு மருத்துவ துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை நீட்டிப்பது நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது ஆகியவை பற்றியும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து