தமிழக செய்திகள்

லண்டனில் இருந்து சரக்கு விமானத்தில் வந்த விமானி உள்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

லண்டனில் இருந்து சரக்கு விமானத்தில் வந்த விமானி உள்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

தினத்தந்தி

சென்னை,

இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து லண்டனில் இருந்து பயணிகள் விமான சேவைக்கு வருகிற 31-ந் தேதி வரை மத்திய அரசு தடை விதித்து உள்ளது. ஆனாலும் சரக்கு விமானங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

லண்டனில் இருந்து சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த விமானி, துணை விமானி, என்ஜினீயர்கள், ஊழியர்கள் உள்பட 9 பேர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பின்னர் சென்னையில் இருந்து வேறு விமானி, என்ஜினீயர்கள், ஊழியர்களுடன் அந்த விமானம் மீண்டும் லண்டன் புறப்பட்டு சென்றது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து