தமிழக செய்திகள்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் சார்பாக தாமிரபரணி கரையில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அகழாய்வு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்ககால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன பொருட்கள் கிடைத்துள்ளன. அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணியின்போது எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் 5 ஏக்கரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வின்போது, கனிமொழி எம்.பி. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த நிலையில், அடிக்கல் நாட்டியபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்,

ஆதிச்சநல்லூரில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. ஆதிச்சநல்லூரில் பல கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வில், இங்கிருந்து பல நாடுகளுக்கு வணிகம் நடைபெற்றது தெரிய வந்துள்ளது.

மனிதர்களை புதைத்த இடங்களும் இங்கு உள்ளன.  அதில் அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. 3,500 ஆண்டுகளுக்கு முன்னதாக உபயோகப்படுத்தப்பட்ட நெல், திணை, தங்கம் ஆகியவற்றை நமது தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள தொல்பொருட்களையும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க உள்ளோம். ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்திற்கு எந்த தடையுமின்றி போதுமான நிதியை மத்திய அரசு வழங்கும் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது