தமிழக செய்திகள்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை ரத்து

நிவர் புயல் முன்னெச்சரிக்கை எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயல் நாளை காரைக்கால் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது.

இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளும் இன்று மதியம் ஒரு மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

மேலும் விழுப்புரம் வழியாக செல்லும் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கும் அரசு பேருந்துகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ் சேவையில்லை என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து