சென்னை,
வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
இரு மார்க்கங்களிலும் நாளை 1 நாள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.