தமிழக செய்திகள்

நிழற்குடை கட்டிடத்தர பயணிகள் வேண்டுகோள்

நிழற்குட கட்டிடத்தர பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தகரக்கொட்டகை என்ற ஊரில் பஸ் நிறுத்தம் உள்ளது. தகரக்கொட்டகை ஊரைச் சுற்றி நாகம்பள்ளி, என் வெங்கடாபுரம், வடுகநாகம்பள்ளி, கேத்தம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் பல கிராமங்கள் உள்ளது. மேற்கண்ட கிராம பகுதியில் இருந்து அரவக்குறிச்சி,கரூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமானால் தகரக் கொட்டகை பஸ் நிறுத்தம் வந்து தான் செல்ல வேண்டும். இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் வெயிலில் கஷ்டப்பட்டு நிற்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே தகரக் கொட்டகை பஸ் நிறுத்தம் அருகில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை