தமிழக செய்திகள்

‘சமையல் கியாஸ் விலையில் மாற்றம் இல்லை’ - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

‘சமையல் கியாஸ் விலையில் மாற்றம் இல்லை’ என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியன் ஆயில் நிறுவனம், டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சில்லரை விற்பனை விலை குறைப்பு செய்ததன் மூலம் டீசலுக்கு லிட்டருக்கு ரூ.2.93, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 97 பைசாவும் குறைந்தது. மும்பையில் பொதுவினியோக மண்ணெண்ணெயின் சில்லரை விற்பனை விலை கடந்த 1-ந்தேதி முதல் ரூ.2.19 குறைந்து உள்ளது.

நடப்பு மாதத்தில் டெல்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் சமையல் கியாஸ் விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த தகவலை இந்தியன் ஆயில் நிறுவன தலைமை பொதுமேலாளர் (தகவல் தொடர்பு) ஜான் பிரசாத் தெரிவித்து உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்