சென்னை,
சர்வதேச கச்சா எண்ணைய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல் விலையில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.73.11 ஆக விற்பனையாகிறது. அதேவேளையில், டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்ந்து ரூ.69.25 ஆக விற்பனையாகிறது.