தமிழக செய்திகள்

தி.மு.க.வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது: மு.க. ஸ்டாலின் பேச்சு

தி.மு.க.வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பு பொதுக்கூட்டங்களை நடத்த இருக்கிறார். இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் காணொலி காட்சி வழியே இன்று பேசினார்.

அவர் பேசும்பொழுது, ராமநாதபுரத்தில் குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது.

ஆன்மிகத்தை காரணம் காட்டி தி.மு.க.வை வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

ஏழைகளை காக்க கூடியவர்கள்தான் உண்மையில் ஆன்மிகத்தை நேசிப்பவர்கள். ஏழைகள் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க. என அவர் பேசியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை