தமிழக செய்திகள்

உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை: முத்துராமலிங்க தேவர் மீண்டும் பிறந்து வர வேண்டும் - அண்ணாமலை பேட்டி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீண்டும் பிறந்து வர வேண்டும் என தமிழக மக்கள் நினைக்கின்றனர் என்று பாஜக தலைவர்அண்ணாமலை கூறினார்.

தினத்தந்தி

மதுரை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முத்துராமலிங்க தேவர் ஐயா தமிழகத்தின் முக்கியமான காலகட்டத்தில் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்திருக்கிறார். தமிழகத்தில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். குறிப்பாக ஆளுகின்ற அரசியல்வாதிகள் எதுவேண்டுமானாலும் பேசலாம், எதுவேண்டுமானாலும் மறைக்கலாம், எதை வேண்டுமானாலும் நடத்தலாம் என்கிற மிதப்பில் உள்ளது.

தமிழகத்தில் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. ஆகவே மீண்டும் தேவர் பிறந்து வர வேண்டும் என தமிழக மக்கள் நினைக்கின்றனர். முத்துராமலிங்க தேவரின் சித்தாந்தம், கொள்கையை பாஜகவால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்று கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்