தமிழக செய்திகள்

ரஜினிகாந்த் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது - எச்.ராஜா

நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, பெரியார் குறித்து அவதூறாக பேசியாதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல்வேறு தரப்பினர் புகார் அளித்தது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறினார்.

மேலும், ஊடகங்களின் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்பதற்காகவே ரஜினிகாந்தின் மீது திராவிட கழக கட்சியினர் புகார் கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை