தமிழக செய்திகள்

"எவ்வளவு செலவானாலும்... கடல்நீர் உட்புகுவதை தடுத்தே தீருவோம்" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

எவ்வளவு செலவானாலும் கடல் நீர் உட்புகுவதை தடுத்தே தீருவோம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக கடலேர பகுதியில் எவ்வளவு செலவானாலும் கடல்நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணைகள் அமைக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

உறுப்பினர் நாகை மாலி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 36 இடங்களில் கடல்நீர் உட்புகுந்ததால், மக்கள், கால்நடைகள், விவசாயிகள் பெரும் அவதியுறுவதாக தெரிவித்தார்.

கடல் நீர் உட்புகுவது வருங்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறிய அவர், தடுப்பணைகள் அமைக்க 7.6 கோடி ரூபாய் ஒடுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தற்போது 11 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறிய அவர், எவ்வளவு செலவானாலும் கடல் நீர் உட்புகுவதை தடுத்தே தீருவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது