தமிழக செய்திகள்

எந்த மாதம் பிறந்தாலும் திமுகவுக்கு வழியே பிறக்காது - அமைச்சர் உதயகுமார் கருத்து

எந்த மாதம் பிறந்தாலும் திமுகவுக்கு வழியே பிறக்காது என்று அமைச்சர் உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மதுரை,

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயகுமார், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைக்கு முதல் பரிசாக தலா ஒரு கார் வழங்கப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைப்பார்கள்; சிறந்த வீரர் மற்றும் காளைக்கு அவர்கள் காரை பரிசாக வழங்குவார்கள். ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். மாஸ்க் அணிந்திருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் தொடர்ந்து பங்கேற்க முடியும் என்று தெரிவித்தார்.

பின்னர் தை பிறந்தால் வழிபிறக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், தை அல்ல பங்குனியோ, மாசியோ பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வராது. ஸ்டாலினுக்கு வழி எப்போதும் பிறக்காது என்று கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை