தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் எனினும் பொதுமக்கள் கவன குறைவாக இருக்க கூடாது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

வெளிநாடுகளில் ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவன குறைவாக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தகுதியுடையவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்