தமிழக செய்திகள்

"தென்னரசுக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை" - அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம்

பொதுக்குழுவில் பெயரை கொடுக்காததால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் இடம் பெறவில்லை என்று சிவி சண்முகம் கூறினார்.

புதுடெல்லி,

வருகிற 27-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரை அறிவித்தன. இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,

அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதத்தினை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடம் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் படிவம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சி.வி சண்முகம் கூறினார். அவர் பேசியதாவது:- அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,646 பேருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தென்னரசுவிற்கு பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் 92% பேர் அதாவது 2501 வாக்குகள் தென்னரசுவிற்கு ஆதரவாக கிடைத்துள்ளது.  பொதுக்குழுவில் பெயரை கொடுக்காததால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் இடம் பெறவில்லைஇவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு