தமிழக செய்திகள்

பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு

பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தீபாவளி அன்று திரையரங்குகளில் சிறப்பு காட்சி திரையிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் விடுமுறையை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுவதால் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.

பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை . தீபாவளி சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து, பணத்தினை திருப்பிக்கொடுக்க திரையரங்கு உரிமையாளர்களிடம் வலியுறுத்தி உள்ளோம் என்று கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை