கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

கர்நாடகாவுக்கு நாளை லாரிகளை இயக்கவேண்டாம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை நாளை இயக்க வேண்டாம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை நாளை இயக்க வேண்டாம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.

அதேபோல, வட மாநிலங்களில் இருந்து கர்நாடகா வழியாக தமிழ்நாடு வரும் லாரிகளும் ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்திவைக்கவும் எனவும், லாரிகள் அனைத்தும் அந்தந்த எல்லைகளில் நிறுத்தவேண்டும் என்றும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாடு லாரி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை