திருப்பூர்,
திருப்பூர் நொய்யல் ஆற்றின் இருபுறமும் கரைகள் பலப்படுத்தப்பட்டு சாலைகள் அமைக்கும் பணி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நெய்யல் ஆற்றை அழகுபடுத்தி கரையோரம் நடைபாதை மற்றும் பூங்காக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று காலை நொய்யல் ஆற்றின் கரையோரம் மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், நிட்மா சங்க தலைவர் அகில் ரத்தினசாமி, உதவி ஆணையாளர் வாசுகுமார், கவுன்சிலர் செந்தூர் முத்து உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.