சேலம்,
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 107 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 10 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக, சேலம் மாவட்டத்தின் பல்வேறு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லை என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் சூழலில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.