தமிழக செய்திகள்

நலவாரியத்தில் உறுப்பினராக இல்லாத புகைப்பட கலைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் - அரசுக்கு, விஜயகாந்த் கோரிக்கை

நலவாரியத்தில் உறுப்பினராக இல்லாத புகைப்பட கலைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த உத்தரவால் அனைத்து தரப்பு மக்களும், தொழில்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும், தமிழக அரசு நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கியது. ஆனால் தமிழகம் முழுவதும் 3 லட்சம் புகைப்பட கலைஞர்கள் இருந்தும் நல வாரியத்தில் அவர்கள் உறுப்பினராக இல்லை.

அவர்களை நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க முன்பு கோரிக்கை வைத்தும் அரசு அதில் ஆர்வம் காட்டவில்லை. நல வாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத பல தொழில்களை சேர்ந்த அனைவருக்குமே தமிழக அரசு உரிய சலுகைகளை வழங்கி, அவர்களுடைய தொழில்கள் நலிவடையாமல் இருக்க தொழில் தொடங்க கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில் நலவாரிய உறுப்பினர்களுக்கு கிடைத்த அரசின் உதவியும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. நல வாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத இந்த புகைப்பட கலைஞர்களுக்கும் வறுமையை கருத்தில் கொண்டு உதவித்தொகை வழங்கிடவும், நல வாரியத்தில் உறுப்பினர்கள் ஆக்கவும், தொழிலை தொடங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...