தமிழக செய்திகள்

செங்குன்றம் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவு - கட்டிட பணியின்போது பலியான பரிதாபம்

செங்குன்றம் அருகே கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரிகாலன் நகரில் பெருமாள் என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்த கட்டிடத்தை கட்டும் பணியில் கொளத்தூர் பிரபு என்பவர் ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இந்த கட்டிடப் பணியில் வட மாநில தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த அலாவுதீன் (வயது 45) என்பவர் கட்டிட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, வேலை செய்யும் இடத்தில் மேலே சென்று கொண்டிருந்த மின்சார கேபிள் அலாவுதீன் மீது பட்டு விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்து செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்