தமிழக செய்திகள்

மறைமலைநகர் அருகே கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது

மறைமலைநகர் அருகே கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை பகுதியில் திருட்டுத்தனமாக கஞ்சா விற்கப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு சந்தேகப்படும்படி கையில் பையுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்த வடமாநில வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்தார். இதனை தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரமோத் குமார் (வயது 26), என்பதும் அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 100 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரமோத் குமாரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு