தமிழக செய்திகள்

வீட்டில் பணம் திருடிய வடமாநில வாலிபர் கைது

போடியில் உள்ள ஒரு வீட்டில் பணம் திருடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (வயது 40). நேற்று முன்தினம் காலையில் இவரது வீட்டுக்கு வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வந்தார். தங்க நகைக்கு பாலீஸ் போட்டு தருவதாக அவர் கூறியுள்ளார். அவரை பாண்டீஸ்வரன் வீட்டிற்குள் அழைத்து சென்றா. பின்னர் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் நகை பாலீஷ் போட வேண்டாம் என்று திருப்பி அனுப்பினார். அவர் சென்ற பின் பார்த்த போது, வீட்டில் மேஜை மீது வைத்திருந்த ரூ.500-ஐ காணவில்லை. உடனே அவர் வெளியே சென்று பக்கத்து தெருவில் நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த சன்னிகுமார் (20) என்றும், பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை