சென்னை
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
அந்தமான் மற்றும் வட மேற்கு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
அந்தமான், மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு தமிழக மீனவர்கள் செல்ல வேண்டாம்
நீலகிரி ,கோவை தேனியில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இதர பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னையை பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழைபெய்யவாய்ப்பு உள்ளது. என கூறினார்.