தமிழக செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

சென்னை,

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

கோட்டூர்புரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து சென்னை, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வரும் 8 பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

பணிகளை விரைந்து முடிந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.