தமிழக செய்திகள்

வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்: மாற்று இடம் கேட்டு மக்கள் மனு

தேனியில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதால் மாற்று இடம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்

தேனி குட்செட் தெருவை சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "தேனி குட்செட் தெரு பகுதியில் 56 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 46 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ரெயில்வே துறை சார்பில் எங்களின் வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...